Junior Vikatan on Saravana Bhavan case
Follow up post on Saravana Bhavan Shivakumar's involvement in US Visa Fraud.
Junior Vikatan has a cover story on the same topic with lot of juicy info about the relationship between Shivakumar and his dad Annachi Rajagopal. It also highlights the irregularities going on in some of the overseas operations of Saravana Bhavan.
நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம் என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார் சிவகுமார். (விகடன் வழியாக)
Labels: Food, News and Views, Tamil Posts
1 Comments:
For those of us who are non tamilians can you please put up a translated version ?
By Boundlessdreamz, at 3:28 PM
Post a Comment
<< Home