சன் (பிக்சர்ஸ்) செய்திகள்
பீதிக்கும் பரபரப்புக்கும் பெயர்போன சன் செய்திகளில் நடுநிலையை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். சன் தொலைக்காட்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியதிலிருந்து தங்கள் திரைப்படம் சம்பந்தப்பட்ட உருப்படாத செய்திகள் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது வழக்கமாகியுள்ளது. காதலில் விழுந்தேனில் ஆரம்பித்த தலைவலி படிக்காதவன் வரை தொடர்கிறது.
இன்றைய தலைப்புச் செய்திகளில் சுள்ளான் தனுஷ் படிக்காதவன் திரைபடத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் கண்டு கழித்தார் எனும் செய்தி தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் செய்திகளை விட படிக்காதவன் செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது எப்படி என்று சற்றும் புரியவில்லை. தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் பலத்தை கொண்டு சுமாரான படத்தைக் கூட வெற்றிப் படமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளனர் மாறன் சகோதரர்கள். இந்தப் போக்கு "Editorial Integrity"-யை தொழில் வெற்றிக்காக விட்டுக்கொடுப்பதாகும். விளம்பரதாரர்களுக்கு சாதகமாக செய்திகள் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. வடக்கில் Times of India போன்ற நிறுவனங்கள் இதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாது, சிறந்த பத்து பாடல்கள் & சிறந்த பத்து திரைப்படங்கள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் தங்கள் சொந்த தயாரிப்பு படங்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.
மேலும் பல படங்களை தயாரிக்கும் சன் நிறுவனம் தங்கள் செய்தித்தாள், பண்பலை மற்றும் தொலைக்காட்சி மூலம் மக்களை முட்டாள் ஆக்கி படத்தை ஓட வைக்க சகல முயர்ச்சிகளிலும் ஈடுபடும். பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் இவ்வேளையில், சன் செய்திகளை விட அதிக பொழுதுபோக்கு தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி கிடையாது.
Labels: Kollywood, Media, Sun TV, Tamil Posts